Home One Line P1 அரசியல் சண்டையை நிறுத்த அம்னோ முடிவு!

அரசியல் சண்டையை நிறுத்த அம்னோ முடிவு!

839
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 ஐத் தொடர்ந்து “அரசியல் சண்டையை” நிறுத்துவதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி அறிவித்து, தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிப்பதாக வலியுறுத்தினார்.

“கொவிட் -19 அச்சுறுத்தலையும், நாட்டின் பொருளாதார நிச்சயமற்ற தன்மையையும் நாடு எதிர்கொள்ளும் நேரத்தில் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், தேசிய கூட்டணி அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை பலப்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தற்போதைய கொவிட் -19- ஐ எதிர்த்து போராடவும், பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதற்கும் இது செய்யப்பட்டதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

இப்போதைக்கு கொவிட்-19 தொடர்பான விவகாரத்தில் கவனம் செலுத்த இருப்பதாக அம்னோ முடிவு செய்துள்ளதாகவும் சாஹிட் கூறினார்.