Home One Line P1 அரசியலமைப்பிற்கு உட்பட்டு மாமன்னர் ஆலோசனையை கவனிப்பதாக அன்வார் அறிக்கை

அரசியலமைப்பிற்கு உட்பட்டு மாமன்னர் ஆலோசனையை கவனிப்பதாக அன்வார் அறிக்கை

657
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மொகிதின் யாசினை பிரதமராக பதவி நீக்கம் செய்ய முயற்சிக்கும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், நாட்டின் நிர்வாகத்தை பாதிக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் அரசியல் விளையாடக்கூடாது என்ற மாமன்னரின் ஆலோசனையை கவனத்தில் கொண்டதாகக் கூறினார்.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் அரசியலில் அதிகப்படியாக ஈடுபடக்கூடாது என்ற மாமன்னரின் ஆலோசனையையும் நான் கவனத்தில் கொள்கிறேன்.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் அக்கறை கொள்ள வேண்டும். நீதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை சமநிலைப்படுத்தவும், ஊழலை நிராகரிக்கவும், அதிகார துஷ்பிரயோகத்தின் எந்தவொரு கூறுகளையும் கட்டுப்படுத்தவும் கருத்தில் கொள்ள வேண்டும்.

#TamilSchoolmychoice

“இதற்கு ஏற்ப கொவிட் -19 பேரழிவு, வேலையின்மை மற்றும் வறுமை ஆகியவற்றை நிவர்த்தி செய்வதோடு பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்கும், திட்டமிட்டதை பயனுள்ள முறையில் செயல்படுத்தப்படலாம் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், அவசரகால பிரகடனத்திற்கான பிரதமர் மொகிதின் யாசின் விண்ணப்பத்தை மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் நிராகரித்தது குறித்து அன்வார் மாமன்னரைப் பாராட்டினார்.

அன்வார் இதனை “வரலாறு” என்று வர்ணித்து, அரசியலமைப்பு முடியாட்சி முறையையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் பலப்படுத்துவதாகவும் கூறினார்.

“இது அரசியலமைப்பு அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும். மேலும் அரசியல் தலைவர்கள், கல்விசார் பிரமுகர்கள் மற்றும் ஜனநாயக அமைப்புக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது என்று விரும்பும் பொறுப்புள்ள ஊடகங்கள், மக்களின் குரலைப் புரிந்து கொண்டதால் எடுக்கப்பட்டது” என்று அன்வார் கூறினார்.