கோத்தா கினபாலு: சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூரின், சிறப்பு அந்தரங்கச் செயலாளர் கொவிட் -19 தொற்று காரணமாக காலமானார்.
குவின் எலிசபெத் மருத்துவமனையில் நூர்சைன் தாவி (60), சனிக்கிழமை மதியம் 12.40 மணிக்கு காலமானார்.
“இவர் ஒரு நல்ல தலைவர், நண்பர் மற்றும் போர்வீரர். அவர் எங்கள் அனைவருக்கும் அறிவுரை மற்றும் ஊக்கமளித்தார்” என்று சபா பெர்சாத்து முகநூல் பக்க நிர்வாகி சனிக்கிழமை பதிவிட்டார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகத்தில், தாவி சிறப்பு அந்தரங்கச் செயலாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட இருந்தார் என்று கூறப்படுகிறது.