கமல்ஹாசன் இந்திய சினிமாவில் மிகவும் மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவராவார். பல்வேறு காரணங்களுக்காக ஒரு வலுவான, தனக்கான இரசிகர்கள் கூட்டத்தை அவர் பெற்றுள்ளார்.
அவரது நடிப்புக்காகட்டும், கதை, திரைக்கதையாகட்டும், அவரது பாணியில் அவை நகர்த்தப்பட்ட விதமே தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இன்று சனிக்கிழமை (நவம்பர் 7), கமல்ஹாசனுக்கு 65-வது பிறந்தநாள் பூர்த்தியாகுகிறது. சமூக ஊடகங்களில் அவருக்கு பிரபலங்கள், இரசிகர்கள் என வாழ்த்துகள் கூறி மகிழ்கின்றனர். இதே வாழ்த்தினை அவரது ஒவ்வொரு படைப்புகளுக்கு நாம் துணையாக வைத்திருந்தால், இந்திய திரைப்படங்கள் தரம் உலகளவில் போற்றப்பட்டிருக்கும்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக மாநில சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெறுவாரா இல்லையா என்று தெரியாமல், அவர் ஏதோ ஒரு நம்பிக்கையுடன், அறியப்படாத பிரதேசத்திற்குள் தம்மை கொண்டு செல்கிறார். தோல்வியை எதிர்த்து நிற்கும் தன்மையே கமல்ஹாசனை மற்ற கலைஞர்களிடமிருந்து அவரை தனித்து நிற்க வைக்கிறது.
திரைப்படங்களில் அவரது ஈர்க்கக்கூடிய வேலைகள், அவர் இந்திய திரைப்படங்களை உலகளவில் உயர்த்தி நிற்கும் எண்ணத்தை பிரதிபலிகிறது. ஒரே பிரச்சனை என்னவென்றால், அவரது உலகளாவிய ஆசைகளை ஆதரிக்க இந்திய திரையுலகம், தனது மனதையும், பணப்பையையும் இன்னும் திறக்கத் தயாராக இல்லை என்பதுதான்.
நம் சினிமா உணர்வுகளை கூர்மைப்படுத்துவதற்கான அவரது தொடர்ச்சியான முயற்சிகளை நம்மில் பெரும்பாலோர் பாராட்டத் தவறிவிட்ட நிலையில், நாம் திரைப்பட முதலீட்டாளர்களை குறை கூற முடியாது. சகலகலா வல்லவன், காக்கிச் சட்டை, அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராஜன் போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து அவர் மேலும் போற்றப்படுவார் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அது தலைகீழாக மாறியது.
அவரது திரைப்படங்களைப் புரிந்துகொள்வதற்கும் பாராட்டுவதற்கும் நாம் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால், இந்தியத் திரையுலகம் இன்னும் சிறந்த இடத்தில் இருந்திருக்கும். நாம் உட்படுத்தப்படும் ஒரு பரிமாண மற்றும் தேசியவாத திரைப்படங்களுக்கு மாறாக நம் வரலாற்றை சிந்தனையுடன் சித்தரிக்கும் திரைப்படங்கள் நம்மிடம் இருந்திருக்கும்.
மெல் கிப்சன் அபோகாலிப்டோ என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, இப்போது கைவிடப்பட வரலாற்று திரைப்படமான மருதநாயகத்தில் காலனித்துவ காலத்தில் துன்புறுத்தப்பட்ட ஒரு பழங்குடியினரைப் பற்றிய கதையை கமல்ஹாசன் சொல்ல விரும்பினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இளையராஜா தனது யூடியூப் அலைவரிசயில் மருதநாயகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில காட்சிகளை இசை காணொலியாக வெளியிட்டார். இது கமலை இன்னும் உச்சத்தில் நிறுத்தியது.
இந்த காவிய அதிரடி நாடகத்தை கமல் அபோகாலிப்டோ தயாரிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கற்பனை செய்திருந்தார். இருப்பினும், அதை பெரிய திரைக்குக் கொண்டுவருவதற்கு போதுமான நிதி அவரிடம் இல்லை.
கமல்ஹாசனின் ஹே ராம், 2000- ஆம் ஆண்டில் திரையரங்குகளில் முதன்முதலில் வெளியானபோது அதை நாம் பாராட்டியிருக்கலாம்.
குறைந்த பட்சம், இப்போதே நம் பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அவர் ஏதாவது புதிய வழியை ஏற்படுத்த முயலும் போது, நம் கற்பனையையும், அறிவையும் விரிவுபடுத்தவில்லை. இந்த இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால், கதை சொல்லும் புதிய வழிகளை ஆராய்வதை நீண்டகாலமாக நிறுத்தியிருப்பார்கள். ஆனால், கமல் தீவிரமானவர். அவர் ஒருபோதும் நம்மை கைவிடவில்லை.
2001- ஆம் ஆண்டில், அந்த நேரத்தில் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் ஆளவந்தான் என்ற திரைப்படத்தை எழுதி நடித்தார். அவர் ஒரு மனநோய் தொடர் கொலையாளியாக நடித்தார். இந்த பாத்திரம் பல ஆண்டுகளாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. நமக்கு அப்போது அது தேவையற்ற தொழில்நுட்பமாக இருந்திருக்கலாம்.
குறைந்தபட்சம், கமல் ஏதாவது செய்யும்போது, அதை மதிக்க வேண்டும் என்பதை இப்போது நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் அன்பே சிவம் (2003) திரைப்படத்தை வெளியிட்டபோது, இந்த தலைசிறந்த படைப்பைப் பாராட்டத் தவறிவிட்டோம். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பார்த்திருந்தால், நல்லசிவத்தின் சாகசங்களால் கமல் தொடர்ந்து நம் வாழ்க்கையை வளப்படுத்தியிருப்பார். கமல் அன்பே சிவம் படத்தின் தொடர்ச்சியை உருவாக்க விரும்பினார். ஆனால், அவரது பார்வையில் பயணம் செய்து, முதலீடு செய்யக்கூடிய நபர்களை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பாக்ஸ் ஆபிஸில் தோல்வியாகக் கருதப்பட்ட அனைத்து கமல்ஹாசன் திரைப்படங்களும் இப்போது இந்திய சினிமாவின் பொக்கிஷங்களாக கொண்டாடப்படுகின்றன. அவர் எப்போதுமே காலத்திற்கு முன்னால் இருக்கிறார், திரைப்படம் சார்ந்த அவரது வேலையைப் பாராட்டுவதன் மூலம் நம் வாழ்வில் திரைப்படங்களுக்காக அவர் செய்த பங்களிப்பை நினைத்துப் பார்ப்பதற்கான வாய்ப்பு இதுவாகும்.
நம் திரைப்பட தயாரிப்பாளர்கள் சிறந்த திரைப்படங்களை உருவாக்க வேண்டுமென்றால், முதலில் நாம் சிறந்த பார்வையாளர்களாக மாற வேண்டும். அது கமல்ஹாசனைப் பாராட்டுவதன் மூலம் தொடங்குகிறது. பிறந்தநாள் வாழ்த்துகள் ‘ஆண்டவரே’!