கோலாலம்பூர்: தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை சார்பாக, உள்துறை அமைச்சகத்திற்கு அரசாங்கம் வழங்கிய 17 பில்லியன் ரிங்கிட் தொகையை காவல் துறை பாராட்டியுள்ளது.
நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021 வரவு செலவுத் திட்டம் தொடர்பான அறிக்கையில், சமூகத்திற்கு சேவை வழங்கலை வலுப்படுத்த இந்த உதவித் திட்டம் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் கூறினார்.
ஓய்வுப் பெற்ற 40,000 காவல் துறையினருக்கு 500 ரிங்கிட் வழங்குவதையும் அவர் பாராட்டினார்.
வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் வழங்கிய ஒதுக்கீடு மக்களின் நலனுக்காகவும், நாட்டின் நல்வாழ்விற்காகவும் உகந்ததாக இருப்பதை காவல்துறை உறுதி செய்யும் என்று அப்துல் ஹமீத் கூறினார்.