கோலாலம்பூர் : அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் இவ்வருட தீபாவளித் திருநாளில் உள்ளூர் மற்றும் அனைத்துலக தமிழ் மற்றும் இந்தி முதல் ஒளிபரப்பு உள்ளடக்கங்களை கண்டு மகிழலாம். தீமைக்கு எதிரான நன்மை மற்றும் இருளுக்கு எதிரான வெளிச்சம் ஆகியவற்றின் அடையாள வெற்றியைக் கொண்டாடும் வகையில் இவ்வருடக் கருப்பொருளான ‘புன்னகையில் நம்பிக்கை’ என்ற வாசகம் நம்பிக்கையையும் புன்னகையையும் தூண்டுகிறது. அனைத்து மலேசியர்களும் ஆஸ்ட்ரோ உலகம் மற்றும் ராகாவில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை இரசிக்கலாம்.
ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வணிகத்துக்கான துணைத் தலைவர் மார்க் லூர்ட்ஸ் (படம்) கூறுகையில், “உள்ளூர் உள்ளடக்கம் மற்றும் திறமைகளில் முதன்மை வகிப்பதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் ஓர் உருமாற்றத்தில் ஈடுபட்டோம். இத்தீபாவளியில், நாங்கள் இதுவரை தயாரித்த உயர் எண்ணிக்கையிலான உயர்தர உள்ளூர் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளின் வழி மலேசிய உள்ளடக்கத்தை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவோம் என்று நம்புகிறோம். டெலிமூவிக்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் (variety shows), தொடர்கள், இசை நிகழ்ச்சிகள், வலைத்தளத் தொடர்கள் (web-dramas), ஆகியவற்றை எப்போதும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம். இத்திருநாளின்போது நாங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் வற்றாத ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதோடு அவர்களின் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201) தீபாவளியை முன்னிட்டு முதல் ஒளிபரப்புக் காணும் உள்ளூர் நிகழ்ச்சிகள் பின்வருமாறு:
• தீபாவளி அனல் பறக்குது
சமையல் நிபுணர் (செஃப்) காஞ்சனா தேவி, செஃப் டாக்டர் தினேஷ் மற்றும் செஃப் ஷீனா ஆகியோருடன் பாரம்பரிய மற்றும் நவீன இந்திய உணவுகளுக்கான சமையல் நிகழ்ச்சி. இதில் பிரபல உள்ளூர் திறமைகளான டத்தோ அஸ்னில், பிளேக் யாப், டேனேஸ் குமார், விமலா பெருமாள், முகேன் ராவ், தேசிய பூப்பந்து வீராங்கனை, கிசோனா செல்வதுரை, மற்றும் பலர் கலந்துக் கொள்வர்;
• வினோஷா கணசன் மற்றும் மஞ்சுளா ஜோசப் நடித்த, கே. கவி நந்தன் இயக்கத்தில் மலர்ந்த நகைச்சுவை டெலிமூவியான மக்களே சும்மா உக்காருங்க; ரவீன்தாஸ் இயக்கிய, யுவராஜ் மற்றும் பாஷினி சிவகுமார் நடித்த மந்திர த்ரில்லர் டெலிமூவியான ஆடி; மற்றும் கார்த்திக் ஷாமலன் கைவண்ணத்தில் மலர்ந்த, கர்ணன் ஜி கிராக், சசிகுமார் கந்தசாமி, பாஷினி சிவகுமார் மற்றும் பலர் நடித்த சைக்கோ த்ரில்லர் நரன்;
• இந்திய இசை ஜாம்பவான்களான ஏ. எம். ராஜா, பி. சுசீலா, பி. பி. ஸ்ரீனிவாஸ், பி.பானுமதி மற்றும் டி. எம்.சௌந்தரராஜன் (டி.எம்.எஸ்) ஆகியோரின் 50 முதல் 70-ஆம் ஆண்டுகளில் வெளிவந்தப் பாடல்களைப் பாடி அசத்தும் மலேசியக் கலைஞர்களான டத்தின் ஸ்ரீ மணிமாலா, எம். எஸ். ப்ரீடோ, டி.எம்.எஸ். சிவகாந்தன், ஷர்மிளா சிவகுரு, பிரீதா பிரசாத் மற்றும் ஆனந்தா ராஜாராம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் ரெட்ரோ இசை நிகழ்ச்சியான மலரும் புன்னகை;
• விளையாட்டுகள் மற்றும் பல சுவாரசிய விஷயங்களை உள்ளடக்கிய, கே. கவி நந்தன் இயக்கத்தில் மலர்ந்த பல்வேறு நிகழ்ச்சியான (variety show) எம்.சி.ஓ தீபாவளி கொண்டாட்டம்.
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியிலும் (அலைவரிசை 231) வாடிக்கையாளர்கள் உள்ளூர் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம்:
• குபேன் மகாதேவன், சுவர்ணா நாயுடு மற்றும் பென் ஜி நடித்த, கார்த்திக் ஷாமலன் இயக்கிய மணிரத்னம் வந்தாச்சு, நாடகத் தொடர்;
• பிரபல ராகா அறிவிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்களான மகேந்திரன் ராமன் @விகடகவி, “புன்னகை பூ” கீதா; கிருத்திகா நாயர்; ஹேமா ஜி மற்றும் பலர் கலந்து சிறப்பிக்கும், டேனேஸ் குமார் இயக்கிய வாங்க பழகலாம்; முகேன் ராவ் மற்றும் குடும்பத்தினர் கலந்து சிறப்பிக்கும், தேவ் ராஜா இயக்கிய அன்புக்கு நான் அடிமை; மூன் நிலா, கபில் கணேசன், யாஸ்மின் நடியா, இர்பான் சய்னி, விக்ரன் இளங்கோவன் மற்றும் பல பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் பங்கு பெரும் தீபாவளி கருப்பொருளை ஒட்டிய புதையல் வேட்டை நிகழ்ச்சியான (Deepavali-themed treasure hunt) தீபாவளி பொக்கிஷம்; மற்றும், ரசிக்க ருசிக்க தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் (variety show).
• உள்ளூர் கலைஞரான நதியா ஜெயபாலன் தொகுத்து வழங்கும் தீபாவளி அங்க்பாவ் நேரலை போட்டியில், வாடிக்கையாளர்கள் அழைத்து சரியான பதிலைக் கூறுவதன் மூலம் RM6000 வரை ரொக்கப் பரிசுகளை வெல்லும் அரிய வாய்ப்பைப் பெறுவர்.
- கபிலன் பூளோண்ரன் இயக்கிய Astro First (அலைவரிசை 480)-இல் முதல் ஒளிபரப்புக் காணும் உள்ளூர் தமிழ் சஸ்பென்ஸ் த்ரில்லர் மற்றும் மர்மக் கொலை, திரைப்படமான ‘அதிகாரி’-ஐ கண்டு மகிழலாம். இத்திரைப்படத்தில் பால கணபதி வில்லியம், நந்தினி கணசென், ஸ்ரீ குமரன் முனுசாமி, குபேன் மகாதேவன் மற்றும் பல திறமையான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர்.
பின்வரும் புதிய பன்னாட்டு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம்:
• ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டியில் (அலைவரிசை 241) வரலட்சுஷ்மி சரத்குமார் நடித்த, அதிரடி சண்டைக் காட்சிகள் (ஆக்ஷன்) திரைப்படம், டேனி;
• ஜீ தமிழ் எச்டியில் (அலைவரிசை 235) பல்வேறு நிகழ்ச்சிகளான (variety show) ஜீ தமிழ் தொலைக்காட்சி கலைஞர்கள் இடம்பெறும், குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப விருதுகள்; மற்றும் வேடிக்கையான விளையாட்டு நிகழ்ச்சியான சிங்கிள்ஸ் வெர்சஸ் மிங்கிள்ஸ் (Singles vs Mingles);
• ஸ்டார் விஜய் எச்டியில் (அலைவரிசை 232) நகைச்சுவை நிகழ்ச்சியான, கோமடி குருஸ் வெர்சஸ் கோமடி சிஷ்யாஸ் (Comedy Gurus vs Comedy Sishyas); வேடிக்கை பல்வேறு நிகழ்ச்சியான (fun variety show), டிரெண்டிங் மாமியார் திரடிஷனல் மருமகள் (Trending Maamiyar Traditional Marumagal); ரியாலிட்டி நிகழ்ச்சி போட்டியாளர்களுடன் பிக் பாஸ் தீபாவளி சிறப்புக் கொண்டாட்டம்; மற்றும் சிறப்பு பட்டிமன்றம்;
• சன் டிவி எச்டியில் (அலைவரிசை 234) அனைத்துலக அளவில் நேரடியாகத் தொலைக்காட்சிக்கென (direct-to-TV) முதல் ஒளிபரப்புக் காணும் 2020-ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ‘மாயாபசார் 2016’-இன் மறு ஆக்கமான “நாங்க ரொம்ப பிசி” எனும் குற்ற சம்பவங்கள் நகைச்சுவை கலந்த திரைப்படம்;
• BollyOne HD (அலைவரிசை 251) -இல் வருண் தவான், ஷ்ரத்தா கபூர் மற்றும் பிரபு தேவா ஆகியோர் நடித்த, நடனத்தின் விரிவான கொண்டாட்ட திரைப்படமான, ஸ்ட்ரீட் டான்சர் 3D;
மேலும், ஆறு அத்தியாயங்களைக் கொண்ட ஆஸ்ட்ரோ உலகில் முதல் ஒளிபரப்புக் காணும் நகைச்சுவை வலைத்தளத் தொடரான “கண்ணா லட்டு தின்ன ஆசையா” எனும் தொடரை அனைத்து மலேசியர்களும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம். இத்தொடரில், யுவராஜ் கிருஷ்ணசாமி, ஷேபி, மாறன் (ராகா) மற்றும் மாலா அம்லு ஆகியோர் நடித்துள்ளனர்.
ராகா வானொலி சிறப்பு நிகழ்ச்சிகள்
வானொலி முன்னணியில், பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கும் ராகாவின் தீபாவளி கொண்டாட்டம் 2020 எனும் ராகாவின் மெய்நிகர் இசை நிகழ்ச்சியை மலேசியர்கள் ராகாவின் முகநூலில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம்.
இந்தப் பெருநாள் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பானதாக்க, ‘ராகா மற்றும் பாபாஸ் 4 யு (BABA’S 4 U) வழங்கும் ஏதோ எங்களால் முடிந்தது’ எனும் பிரச்சாரத்தின் வழி ராகா பாபாஸுடன் இணைந்து ராகா அதிகாரப்பூர்வ அகப் பக்கத்தில் பரிந்துரைக்கப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கு பெருநாள் பரிசுக் கூடைகளை வழங்குவர்.
மேல் விபரங்களுக்கும், ஆஸ்ட்ரோவின் தீபாவளி நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களுக்கும் www.astroulagam.com.my/Deepavali2020 எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.