கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை வரையிலான, கடந்த 24 மணி நேரத்தில் 1,096 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் மட்டும் 1,090 ஆகும். வெளிநாட்டிலிருந்து 6 தொற்றுகள் பீடிக்கப்பட்டிருக்கிறன.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 54,775 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
சபாவில் அதிகமான தொற்றுகள்
நேற்றைக்கு சிலாங்கூர் அதிகமானத் தொற்றுகளைக் கொண்டு முதலிடத்தில் இருந்தது. ஆனால் இன்று 282 தொற்றுகளை மட்டுமே சிலாங்கூர் பதிவு செய்தது.
மீண்டும் சபா மிக அதிகமானத் தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக இன்று அறிவிக்கப்பட்டது. இங்கு 398 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
அதற்கு அடுத்த நிலையில் 208 தொற்றுகளோடு கோலாலம்பூர், புத்ரா ஜெயா பிரதேசங்கள் மூன்றாவது அதிக தொற்றுகளைக் கொண்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.
இன்று 1,104 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 41,597-ஆக உயர்ந்துள்ளது.
இன்னமும், 12,843 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 106 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 46 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இன்று மூவர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 335-ஆக உயர்ந்துள்ளது.