Home One Line P2 கொவிட்19: மாடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து 100 விழுக்காடு செயல்படும் என நம்பிக்கை

கொவிட்19: மாடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து 100 விழுக்காடு செயல்படும் என நம்பிக்கை

532
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் தடுப்பு மருந்து 100 விழுக்காடு செயல்திறன் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

நோய் தொற்று தீவிரமாக உள்ளவர்களுக்கும் இந்த தடுப்பூசி பயனளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்களிடம் முழுமையாக குணப்படுத்தும் தடுப்பு மருந்து இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதை நிரூபிப்பதற்கான தரவு இப்போது எங்களிடம் உள்ளது. இந்த தொற்று நோயை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று மாடர்னா நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி தால் ஜாக்ஸ் கூறினார்.

#TamilSchoolmychoice

அண்மையில், அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்த கொவிட்-19 தடுப்பு மருந்து தொற்றை அழிப்பதில் 90 விழுக்காடுடன் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி 92 விழுக்காடு திறனுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.