selliyal | MIC must be deregistered – Kedah MB criticises) | 03 December 2020
செல்லியல் காணொலி | “மஇகா பதிவு இரத்து செய்யப்பட வேண்டும்” – கெடா மந்திரி பெசார்
அலோர்ஸ்டார் : கெடா மாநிலத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 30) இந்து ஆலயம் ஒன்று அமுலாக்க அதிகாரிகளால் இடிக்கப்பட்டது தொடர்பில் மஇகா கெடா மாநில தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ ஆனந்தனும் மஇகாவினரும் கடுமையானக் கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து அந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் சட்டத்துக்கு முரணாக நடந்து கொள்ளும் மஇகாவின் பதிவை இரத்து செய்ய வேண்டும் எனக் கடுமையாகச் சாடியிருந்தார்.
கெடா மந்திரி பெசார் பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்த அந்தக் காணொலியை மேலே உள்ள இணைப்பில் காணலாம்.