Home One Line P1 டி ஸ்டார் நிறுவனம் 200-க்கும் மேற்பட்டவர்களை பணீநீக்கம் செய்தது

டி ஸ்டார் நிறுவனம் 200-க்கும் மேற்பட்டவர்களை பணீநீக்கம் செய்தது

628
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டி ஸ்டார் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் உட்பட 200- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொவிட்-19 தொற்று காரணமாக உள்ளூர் ஊடகத் தொழில் வீழ்ச்சியடைந்து வருவதால் இது ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

தினசரி செய்தித்தாள் நிர்வாகம் தலையங்கத் துறையைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 பத்திரிகையாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு பணி நீக்கம் கடிதத்தை நேற்று அது வெளியிட்டதாக வட்டாரம் தெரிவித்துள்ளது.

மற்ற பிரிவுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 ஊழியர்களும் பணிநீக்கம் குறித்த அறிவிப்பைப் பெற்றனர். டி ஸ்டார் நிர்வாகம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கிட்டத்தட்ட 150 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வட்டாரம் மேலும் கூறியது.

#TamilSchoolmychoice

இயக்க செலவினங்களைக் குறைக்க பெரிய அளவில் பணிநீக்கங்களைச் செயல்படுத்தி, ஸ்டார் இறுதியாக மீடியா பிரிமா போல நடவடிக்கையை எடுத்துள்ளது. பல தொழிற்சங்கங்கள் டி ஸ்டாரின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளன. பணிநீக்கங்கள் அவசரமாகவும் பிற விருப்பங்களை ஆராயாமலும் செய்யக்கூடாது என்று அவை வலியுறுத்தின.

மசீச கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டார் மீடியா குழுமம் கடந்த ஆண்டு 1 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

மலேசிய டிரேட்ஸ் யூனியன் காங்கிரஸ் (எம்டியூ.சி) தலைவர் ஹாலீம் மன்சோர் கூறுகையில், தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதை விட செலவுகளைக் குறைப்பதற்கான பிற அணுகுமுறைகளை டி ஸ்டார் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில், பத்திரிகை நிர்வாகம் ஊழியர்களின் வேலைகளை காப்பாற்றும் வகையில் சம்பளத்தை குறைப்பது போன்ற தேர்வுகளை பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் மீது அக்கறை கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக தற்போதைய சவாலான சூழலில், அவர்கள் (டி ஸ்டார்) ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பராமரிக்க உறுதி செய்ய முயற்சிக்க வேண்டும், ” என்று அவர் கூறினார்.

“ஒரு நிறுவனம் ஓர் ஊழியரை நீக்கும் போது, ​​அது உண்மையில் சிக்கலைத் தீர்க்க எளிதான வழியை எடுக்கும். தற்போதைய சூழலில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

டி ஸ்டாரின் பணிநீக்கங்களால் ஹாலிம் வருத்தப்படுவதாகவும், குறிப்பாக பழைய ஊழியர்களுக்கு, இது நிச்சயமாக ஒரு புதிய வேலையைப் பெறுவது கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.