சென்னை: நிவர் புயல் ஓய்ந்த சில மணி நேரங்களில் தமிழகத்தில் புரேவி புயல் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு புரேவி புயலாக மாறியது.
இன்று காலை நிலவரப்படி (இந்திய நேரம்) மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் வரை சூறாவளிக் காற்று வீசியது. காரைக்கால் பகுதியிலும் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடலோர கிராமங்களுக்குச் சென்று மீனவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.