ரியாத்: ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான முதல் இஸ்ரேலிய வணிக விமானம் செவ்வாயன்று துபாயில் தரை இறங்கியது. இது முதல் முறையாக சவூதி அரேபியாவைக் கடந்து சென்றது.
இஸ்ரேர் விமானம் மூன்று மணிநேரங்களுக்கு மேல் பயணம் செய்தது. சவுதி அரேபியாவைச் சுற்றி பறக்க நேரிட்டால் ஆறு மணி நேரம் ஆகலாம். மேலும் இஸ்ரேலுக்கும் அதன் புதிய வளைகுடா நட்பு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் உறவுகளில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
“உண்மையிலேயே பண்டிகை நாள்” என்று விமானத்தின் கேப்டன் ஹாகி கெனான் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஒரு தொலைபேசி அழைப்பில் கூறினார். “இந்த தருணத்தை அடைவது ஒரு பெரிய பாக்கியம்.”
“நாம் இன்று சமாதானத்தின் பலன்களைக் காண்கிறோம். நம் அருமையான சமாதான உடன்படிக்கைக்கு துபாயில் நீங்கள் இறங்கியதை நான் பாராட்டுகிறேன். மேலும் பல நிகழ்வுகள் நடக்க வேண்டும். வாழ்த்துகள். இது மீண்டும் மீண்டும் தொடரட்டும், ”என்று நெதன்யாகு தனது அலுவலகத்திலிருந்து ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
திங்கள்கிழமை மாலை வரை சவூதி வான்வெளியில் பயணிக்க ரியாத் அனுமதி வழங்கவில்லை.