Home One Line P1 தேசிய கூட்டணி அரசாங்கத் தலைவர்கள் மன்றம் அமைக்கப்பட்டது

தேசிய கூட்டணி அரசாங்கத் தலைவர்கள் மன்றம் அமைக்கப்பட்டது

393
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களிடையே நேற்று வியாழக்கிழமை சந்திப்பு நடந்தது.

அரசாங்கக் கொள்கைகளைப் பற்றி விவாதிக்கவும், அரசாங்கத்தில் கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் தேசிய கூட்டணி அரசாங்கத் தலைவர்கள் மன்றத்தை அமைக்க ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு தேசிய கூட்டணி தலைவரும் பெர்சாத்து தலைவருமான பிரதமர் மொகிதின் யாசின் தலைமை தாங்கினார்.

#TamilSchoolmychoice

தேசிய கூட்டணி அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் அடங்கிய செயலகமும் அமைக்கப்பட்டுள்ளது என்று பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

“கூட்டத்தில், தேசிய கூட்டணி அரசாங்கத்தின் கட்சிகள் மக்களின் நல்வாழ்வு மற்றும் நாட்டின் செழிப்புக்கு அரசியல் நிலைத்தன்மையை உருவாக்க வலுவான அரசியல் ஒத்துழைப்பை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது,” என்று ஹம்சா நேற்று இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்களில், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், மசீச தலைவர் வீ கா சியோங், எஸ்யூபிபி தலைவர் சிம் குய் ஹியான் மற்றும் பிபிஎஸ் தலைவர் மாக்சிமஸ் ஜானிட்டி ஓன்கிலி ஆகியோர் அடங்குவர்.

தங்கள் கட்சித் தலைவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்களில் பார்ட்டி பெசகா பூமிபுத்தேரா பெர்சாத்து (பிபிபி) துணைத் தலைவர் அமர் அவாங் தெங்கா அலி ஹசன், பார்த்தி ரக்யாட் சரவாக் (பிஆர்எஸ்) துணைத் தலைவர் ஜோசப் சலாங் காண்டம், பார்ட்டி பெர்சாத்து ரக்யாட் சபா (பிபிஆர்எஸ்) துணைத் தலைவர் ஆர்தர் ஜோசப் குருப், எஸ்ஏபிபி துணைத் தலைவர் எட்வர்ட் டாகுல், பிடிபி மூத்த துணைத் தலைவர் பால் இகாய், மஇகா பொதுச் செயலாளர் அசோஜன் முனியாண்டி மற்றும் ஸ்டார் பொதுச் செயலாளர் குவான் டீ கோ ஹோய்.