Home One Line P1 துங்கு ரசாலி மீது நடவடிக்கை இல்லை

துங்கு ரசாலி மீது நடவடிக்கை இல்லை

561
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2021 வரவு செலவுத் திட்டத்தை நிராகரிக்க முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் உடனான ஒத்துழைப்பு தொடர்பாக அம்னோ ஆலோசனைக் குழுவின் தலைவர் துங்கு ரசாலி ஹம்சா கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முன் கொண்டுவரப்பட மாட்டார்.

கட்சி வட்டாரங்களின்படி, 2021 வரவு செலவுத் திட்டம் மக்களவையில் வெற்றிகரமாக அங்கீகரிக்கப்பட்டதால், குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினரை அழைக்க வேண்டாம் என்று அம்னோ முடிவு செய்ததாகக் கூறினார்.

எவ்வாறாயினும், துங்கு ரசாலி கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவில் நிறுத்தப்பட வேண்டும் என்று சில தரப்பினர் கூறுவதாக வட்டாரம் ஒப்புக் கொண்டது.

#TamilSchoolmychoice

“இதுவரை, மகாதீருடன் பணியாற்றுவதில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு துங்கு ரசாலியை கொண்டுவரப்பட மாட்டார். அவரை ஒழுக்காற்றுக் குழுவின் முன் கொண்டுவர விரும்பும் தரப்புகள் இருந்தாலும், அவ்வாறு செய்யத் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறியதாக செய்தித்தளம் குறிப்பிட்டது.

கடந்த திங்கட்கிழமை, துங்கு ரசாலி மகாதீருடன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். மக்களவையில் வரவு செலவுத் திட்ட வாக்களிப்பில் தேசிய கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடையக்கூடும் என்ற ஊகத்தைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

இதற்கிடையில், துங்கு ரசாலி எடுத்த நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினராக அவரது தனிப்பட்ட உரிமையை அடிப்படையாகக் கொண்டது என்று அம்னோ கருதுகிறது.

“கட்சியைப் பிரதிநிதித்து அல்ல, துங்கு ரசாலி தனது தனிப்பட்ட முடிவில் நடவடிக்கை எடுத்தார் என்று அம்னோ நினைக்கிறார்,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ், தேசிய கூட்டணி அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சியுடன் முயன்ற போதிலும், துங்கு ரசாலி மீது அம்னோ எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை என்று நஸ்ரி கூறியிருந்தார்.