Home One Line P1 துங்கு ரசாலி மீது நடவடிக்கை எடுக்க இது நேரமில்லை!

துங்கு ரசாலி மீது நடவடிக்கை எடுக்க இது நேரமில்லை!

340
0
SHARE
Ad

கோலாலம்பூர்: குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா மீது அம்னோ எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை என்று நஸ்ரி கூறினார்.

எனவே, துங்கு ரசாலியை நீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகள் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவதற்கு மட்டுமே வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“எங்களின் (அம்னோ) எண்ணிக்கை பெரியதாக இருந்தால், நாங்கள் தனிநபரை அகற்ற விரும்பலாம். இது அகற்றுவதற்கான நேரம் அல்ல,” என்று அவர் கூறினார்.

தேர்தலின் போது துங்கு ரசாலி அம்னோவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் நிலைமை வேறுபட்டிருக்கும் என்று நஸ்ரி கூறினார்.

2021 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து, டிசம்பர் 14-ஆம் தேதி துங்கு ரசாலி டாக்டர் மகாதீர் முகமட்டுடன் செய்தியாளர் சந்திப்பைப் பகிர்ந்து கொண்டார்.

அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் ஷாரில் ஹம்டான் நேற்று துங்கு ரசாலியை விமர்சித்திருந்தார். அவரை தவறாக வழிநடத்தும் உறுப்பினராக கருதி, கட்சியை மதிக்க தவறிவிட்டார் என்று கூறினார்.

துங்கு ரசாலி அம்னோ உறுப்பினர்களைக் குழப்பவில்லை என்று நஸ்ரி கருதுகிறார். ஏனெனில் உண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் கருத்தாய்வுகளின்படி முடிவுகளை எடுக்க சுதந்திரமாக உள்ளனர் என்று அவர் கூறினார்.

உண்மையில், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவின் விளைவாக தற்போதைய தேசிய கூட்டணி அரசாங்கம் உருவாக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

“எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க சுதந்திரமாக இருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.