Home One Line P2 இங்கிலாந்தில் 130,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது

இங்கிலாந்தில் 130,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது

538
0
SHARE
Ad

பிரிட்டன்: இங்கிலாந்தில் இதுவரையிலும் 137,000- க்கும் மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்தில் பிபைசர் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு செலுத்த கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது. ஏழு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் சுமார் 137,000-க்கும் அதிகமானோருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

“கோவிட் தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் சிறப்பாக தொடங்கியுள்ளது. ஏழு நாட்கள் நிறைவடைந்துள்ளது. இங்கிலாந்தில் 108,000 பேருக்கும், வடக்கு அயர்லாந்தில் 4000 பேருக்கும், ஸ்காட்லாந்தில் 18,000 பேருக்கும் தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பிரிட்டனில் 137,897 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேற்கொண்டு அதிகரிக்கும்,” என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது.