Home One Line P1 கொவிட்-19 பரிசோதனை முடிவுகள் மோசடி- எழுவரை காவல் துறை தேடுகிறது

கொவிட்-19 பரிசோதனை முடிவுகள் மோசடி- எழுவரை காவல் துறை தேடுகிறது

486
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ரவாங்கில் கொவிட் -19 பரிசோதனை முடிவை மோசடி செய்ததாக நம்பப்படும் ஏழு சந்தேக நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சந்தேகநபர்கள் அனைவரும் மருந்தகத்திலிருந்து உறுதிப்படுத்தக் கேட்கப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ளதாக கோம்பாக் மாவட்ட காவல் துறைத் தலைவர் அரிபாய் தாராவே கூறினார்.

“கடந்த ஜூன் மாதம் இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சந்தேக நபர்கள் பயன்படுத்துவதற்காக அசல் பரிசோதனை முடிவை வழங்கியவர் உட்பட அனைத்து சந்தேக நபர்களும் கண்காணிக்கப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக ரவாங்கில் உள்ள ஒரு தனியார் மருந்தகம் தகவல் வெளியிட்டதை அடுத்து அவர் மலேசியாகினியிடம் இதனைக் கூறினார்.

எஸ்பி கேர் நிறுவனர் டாக்டர் சத்தியா பிரகாஷ் நடராஜன், ஜூன் முதல் கொவிட் -19 பரிசோதனை முடிவுகளை மோசடி செய்த 20 வழக்குகளை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

“ஒவ்வொரு முறையும், நாங்கள் ஒரு தனிநபருக்கு கொவிட் -19 சோதனை செய்கிறோம். முடிவுகள் தனிப்பட்ட தகவலுடன் ஆவணத்தின் வடிவத்திலும், எங்கள் மருந்தகத்தில் ஒரு குறிப்பு எண்ணிலும் நகலெடுக்கப்படும். ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு குறிப்பு எண் உள்ளது. இருப்பினும், சமீபத்தில் ஆவணங்களை மோசடி செய்வதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். கொவிட் -19 பரிசோதனை முடிவு ஆவணங்களில் தனிநபர்களின் பெயர்களை மாற்ற சில தரப்புகள் வேலை செய்துள்ளனர்,” என்று பிரகாஷ் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக தனது தரப்பு காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்துள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், ஏழு சந்தேக நபர்களும் ஜோகூரின் பொந்தியானில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்ய போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக அரிபாய் கூறினார்.

“இருப்பினும், நிறுவனம் கொவிட் -19 சோதனையின் முடிவுகளைக் கோரி, அதை வழங்கிய மருந்தகத்திலிருந்து உறுதிப்படுத்துமாறு கேட்டபோது, ​​சந்தேக நபர்கள் அனைவரும் அந்த நாளில் காணாமல் போனார்கள்,” என்று அவர் கூறினார்.

வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 471 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அரிபாய் கூறினார்.