கோலாலம்பூர் : இங்குள்ள பிரின்ஸ் கோர்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தாயார் தோபுவான் ஹாஜா ராஹாவை இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 17) மாலை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
மொகிதின் தோபுவான் ஹாஜா ராஹாவைச் சந்திக்க வந்தபோது நஜிப் துன் ரசாக் உடனிருந்தார். நஜிப்பின் சகோதரர், முன்னாள் சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் தலைவர் நசிர் ரசாக்கும் அப்போது அங்கிருந்தார். அவரிடமும் மொகிதின் யாசின் நலம் விசாரித்தார்.

பின்னர் தோபுவான் ஹாஜா ராஹா உடல்நலம் பெற்று குணமடையப் பிரார்த்திப்பதாக மொகிதின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டபோது, மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டார்.
மலேசியாவின் இரண்டாவது பிரதமரும் நஜிப்பின் தந்தையுமான துன் அப்துல் ரசாக்கின் துணைவியாரான தோபுவான் ஹாஜா ராஹாவுக்கு வயது 87.
