Home One Line P1 கொவிட்-19: சிங்கப்பூர், இந்தோனிசியாவுக்கு தடுப்பு மருந்து விரைவாக கிடைத்தது ஏன்? கைரி விளக்கம்

கொவிட்-19: சிங்கப்பூர், இந்தோனிசியாவுக்கு தடுப்பு மருந்து விரைவாக கிடைத்தது ஏன்? கைரி விளக்கம்

470
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர் போன்ற பணக்கார நாடுகள், ஏன்  மலேசியாவிற்கு முன்னதாகவே கொவிட்-19 தடுப்பு மருந்துகளை பெற்றுக் கொண்டன என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் விளக்கினார்.

மலேசியாவை விட சில மாதங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் பிபைசருடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்று கைரி மேலும் விளக்கினார்.

“ஆம், நிச்சயமாக சிங்கப்பூர் அதன் தடுப்பு மருந்தைப் பெற்றுள்ளது. ஆனால், சிங்கப்பூர் நம்மை விட அதிக நிதி திறன்களைக் கொண்டுள்ளது. அவர்கள் வாங்கும் எண்ணிக்கையும் நம்முடையது போல பெரியதல்ல. நாம் பல நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“வளர்ந்த, பணக்கார நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, சிங்கப்பூர் நம்மை விட முன்பே நிறைய பணத்திற்கு இதனை வாங்கியுள்ளன. அவை அதிக விலைக்கு வாங்க முடியும். மேலும் அவர்கள் அந்த முடிவை எடுக்க முடியும், ஏனெனில் அவர்களின் வரவு செலவுத் திட்டங்கள் நம்முடையதை விட பெரியவை,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் இந்தோனிசியா கொவிட் -19 தடுப்பு மருந்தை முதன்முதலில் பெற்றபோது, ​​சீன தடுப்பு மருந்து உற்பத்தியாளர் சினோவாக்கின் மருத்துவ பரிசோதனையில் இந்தோனிசியாவும் ஈடுபட்டதால்தான் என்று கைரி கூறினார்.

“இந்தோனிசியா சினோவாக்கிற்கான மருத்துவ பரிசோதனைகளை நடத்தும் இடமாக இருப்பதால், அதனால்தான் அவர்களுக்கு தடுப்பு மருந்து கிடைத்தது,” என்று அவர் விளக்கினார்.

நாட்டின் நிதி ஆதாரங்களின் நிலையை கணக்கில் எடுத்துக்கொண்டு, அதன் மக்கள்தொகையில் 82.8 விழுக்காட்டினருக்கு தடுப்பு மருந்தை வழங்க அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது என்று கைரி கூறினார்.