கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) அவசரகால நிலை அறிவிக்கப்பட்ட போதிலும் மலேசியா வணிகத்திற்காக எப்போதும் போல செயல்படும் என்று பிரதமர் மொகிதின் யாசின் கூறினார்.
இந்த அவசரநிலை பிரகடனம், புத்ராஜெயா, பொருளாதார மீளுருவாக்கம் குறித்து கவனம் செலுத்தவும், அமைதியையும் நிலைத்தன்மையையும் வழங்கும் என்று அவர் கூறினார்.
“நாங்கள் நல்லாட்சியை வழங்குவதில் உறுதியுடன் இருக்கிறோம். தொடர்ச்சியான நிலைத்தன்மை, பொருளாதார மீட்புப் பாதையைத் தக்க வைத்துக் கொள்ள உதவும்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, இன்று நாடு முழுவதிலும் ஆகஸ்டு 1 வரை அவசர நிலையை மாமன்னர் அறிவித்திருந்தார். இது நாட்டில் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் மேற்கொள்ளப்படுவதாக அரண்மனை ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவிதித்திருந்தது.