Home One Line P1 அவசர நிலைக்கும், இராணுவத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை

அவசர நிலைக்கும், இராணுவத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை

570
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடைமுறைக்கு வர இருக்கும் அவசர நிலை குறித்து பொது மக்கள் பயம் கொள்ள தேவையில்லை என பிரதமர் மொகிதின் யாசின் தெர்வித்துள்ளார். இது இராணுவ கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிரகடனம் இல்லை என்று அவர் கூறினார்.

“அரசாங்கம் எப்போதும் போல தொடர்ந்து செயல்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். மாமன்னரின் அவசர நிலை பிரகடனம் இராணுவ சதி அல்ல. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது,” என்று அவர் இன்று ஒரு தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் கூறினார்.

மோசமடைந்து வரும் கொவிட் -19 தொற்றுநோயை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கத்திற்கு சில அதிகாரங்கள் தேவை என்று மொகிதின் கூறினார்.

#TamilSchoolmychoice

இன்று முன்னதாக, அரண்மனை காப்பாளர், டத்தோ அகமட் பாட்சில் ஷாம்சுடின், மாமனனர், நேற்று தேசிய அளவிலான அவசரகால பிரகடனத்திற்கு அரசாங்கத்திற்கான கோரிக்கையை ஒப்புக் கொண்டதை உறுதிப்படுத்தினார்.

அவசரகால நிலை ஆகஸ்ட் 1 வரை நீடிக்கும்.