புத்ரா ஜெயா : நஜிப் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க முடியுமா என்ற வழக்கு இன்று திங்கட்கிழமை (ஜனவரி 6) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டுக் கொண்டிருக்கும் நிdலையில், அத்தகைய உத்தரவை வழங்கிய முன்னாள் மாமன்னர்- பகாங் ஆட்சியாளர் – சுல்தான் அப்துல்லாவின் அதிகாரபூர்வக் கடிதம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.
நஜிப்பின் தண்டனை குறைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய சிறைவாசத்தை அவர் வீட்டுக் காவலில் கழிக்கலாம் என்ற முன்னாள் மாமன்னரின் உத்தரவு அந்தக் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.