கோலாலம்பூர்: இன்று அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனத்தின் போது, நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாது எனவும், பொதுத் தேர்தல்கள் எதுவும் நடக்காது என்றும் பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.
ஆனால், நீதித்துறை தொடர்ந்து செயல்படும் என்று அவர் கூறினார். மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் எப்போதும் போல செயல்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
முன்னதாக, இன்று நாடு முழுவதிலும் ஆகஸ்டு 1 வரை அவசர நிலையை மாமன்னர் அறிவித்திருந்தார். இது நாட்டில் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் மேற்கொள்ளப்படுவதாக அரண்மனை ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்திருந்தது.