Home One Line P1 உள்துறை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று

உள்துறை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று

550
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுக்கு மூன்றாவது அமைச்சரவை அமைச்சராக உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்.

ஹம்சா இன்று அதிகாலை கொவிட் -19தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டதாகவும், ஜனவரி 8 முதல் ஜனவரி 11 வரை அமைச்சரின் நெருங்கிய தொடர்புகளை கொவிட் -19 தொற்றுக்கு உடனடியாக பரிசோதிக்குமாறு உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, கொவிட் -19 தொற்றுக்கு மொத்தம் மூன்று அமைச்சரவை அமைச்சர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா இன்று தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

மூன்று நாட்களுக்கு முன்பு பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதாரம்) முஸ்தபா முகமட்டுக்கு கொவிட் -19 தொற்று ஏற்பட்டதை அடுத்து, பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹாருண் இந்த பாதிப்புக்கு ஆளானார்.

இதற்கிடையில், பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ரெட்சுவான் முகமட் யூசோப்  கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைப் பெற்ற பின்னர் அவர் அத்தொற்றுக்கு ஆளாகவில்லை என்பது தெரியவந்தது.

கடந்தாண்டு, பிரதமர் துறை அமைச்சர் சுல்கிப்ளி முகமட் அல்-பக்ரி கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சைக்குப் பின்பு குணமடைந்தார்.