Home One Line P1 சசிகலா மருத்துவமனையில் இருந்து நேரடியாக சென்னை செல்லக் கூடும்

சசிகலா மருத்துவமனையில் இருந்து நேரடியாக சென்னை செல்லக் கூடும்

620
0
SHARE
Ad

பெங்களூரு : உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா, தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

மூச்சு திணறல், காய்ச்சல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்ட சசிகலாவின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அபாயம் ஏதுமில்லை என்றும் அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். அவர் தற்போது பெங்களூருவில் தங்கியிருக்கிறார்.

சசிகலா சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் காட்சிகளை தமிழகத் தொலைக்காட்சி ஊடகங்கள் நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 21) ஒளிபரப்பின.

#TamilSchoolmychoice

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கபட்ட சசிகலா, வரும் 27 ல் விடுதலை செய்யப்படுகிறார். அந்தத் தேதி வரை மருத்துவமனையிலேயே இருந்து விட்டு நேரடியாக மருத்துவமனையிலிருந்து விடுதலையாகி சசிகலா சென்னை செல்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் அவருக்கு கொரொனா தொற்று இல்லை என அவர் சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இருப்பினும் அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்பதால் விடுதலையானதும் அங்கிருந்து கார் மூலம் சென்னை செல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.