Home One Line P1 சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி – காய்ச்சல் மூச்சுத் திணறலால் அவதி

சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி – காய்ச்சல் மூச்சுத் திணறலால் அவதி

500
0
SHARE
Ad

பெங்களூரு : தவறான முறையில் சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் சசிகலா, எதிர்வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் புதுடில்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

அப்போது சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என அறிவித்தார்.