Home One Line P2 டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்

டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்

688
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்க நேரம் காலை 8.00 – மலேசிய நேரம் இரவு 9.00 மணி அளவில் மேரின் 1 (Marine 1) என்ற பெயர் கொண்ட, அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் ஹெலிகாப்டர் வெள்ளை மாளிகையின் ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்கியது.

இந்த ஹெலிகாப்டர் காத்திருந்து வெளியே வந்த டொனால்ட் டிரம்ப்பையும் அவரது மனைவி மெலானியா டிரம்பையும் ஏற்றிக் கொண்டு பறந்தது.

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியே வந்த டிரம்ப் பத்திரிகையாளர்களிடம் உரை எதனையும் நிகழ்த்தவில்லை.

#TamilSchoolmychoice

வெள்ளை மாளிகையிலிருந்து டிரம்ப் தம்பதியரை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட மேரின் 1 ஹெலிகாப்டர் ஜோயிண்ட் பேஸ் அண்ட்ரூஸ் இராணுவ விமாளத் தளத்தை சென்றடைந்தது.

அங்கு ஏர் போர்ஸ் 1 விமானத்தின் மூலம் டிரம்ப் புளோரிடா மாநிலத்திற்குப் புறப்பட்டுச் செல்வார்.

ஜோயிண்ட் பேஸ் அண்ட்ரூஸ் இராணுவ விமாளத் தளத்தில் டிரம்ப் பத்திரிகையாளர்களிடமும் தனது ஆதரவாளர்களிடையேயும் பிரியாவிடை உரையாற்றினார்.

அதன் பின்னர் டிரம்ப் தம்பதியர் ஏர் போர்ஸ் 1 விமானத்தில் ஏறினர். அவர்களை ஏற்றிக் கொண்டு புளோரிடா மாநிலம் செல்கிறது அந்த விமானம்.

பதவி விலகும் இறுதி நாளில் அவருக்கிருக்கும் அதிகாரத்திற்கேற்ப 143 சிறைக் கைதிகளை விடுதலை செய்வது, அவர்களுக்கான தண்டனையைக் குறைப்பது ஆகிய ஆவணங்களில் டிரம்ப் கையெழுத்திட்டார்.