Home One Line P2 அமெரிக்க அதிபர் அதிகாரப் பரிமாற்றம் தொடங்கியது – டிரம்ப் வெளியேறினார்

அமெரிக்க அதிபர் அதிகாரப் பரிமாற்றம் தொடங்கியது – டிரம்ப் வெளியேறினார்

604
0
SHARE
Ad

வாஷிங்டன் : (அமெரிக்க நேரம் காலை 7.50) ஓர் புதிய அத்தியாயத்தை ஜோ பைடன் தலைமையில் இன்று புதன்கிழமை ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்கா தொடங்குகிறது. ஆம் இன்றுதான் அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பதவியேற்கிறார் ஜோ பைடன்.

வழக்கமாக அதிகாரப் பரிமாற்றத்தின்போது பதவி விலகிச் செல்லும் அதிபர் மரியாதை நிமித்தம் புதிய அதிபரைச் சந்தித்து அவருடன் தேநீர் அருந்தி விட்டு வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவார்.

ஆனால், டிரம்ப், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கவில்லை எனத் தொடர்ந்து கூறி வருகிறார். அதைத் தொடர்ந்து ஜோ பைடனைச் சந்திக்காமல், அவரைப் புறக்கணித்து விட்டு வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் புறப்பட்டு புளோரிடா மாநிலம் நோக்கி செல்கிறார்.

#TamilSchoolmychoice

அமெரிக்க வரலாற்றில் இதுபோன்று ஓர் அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அதிபரைச் சந்திக்காமல் செல்வது இதற்கு முன் 1861-ஆம் ஆண்டில்தான் நிகழ்ந்திருக்கிறது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

வாஷிங்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பதவியேற்பதற்கு முன்பாக ஜோ பைடன் இன்று காலையில் தேவாலயத்தில் வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.