இதில் உள்ளூரில் 4,003 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 5 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 169,379 சம்பவங்கள் இதுவரையில் பதிவாகி உள்ளன.
இன்னும், 41,087 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 246 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 96 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இன்று ஒரே நாளில் 11 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 630-ஆக உயர்ந்துள்ளது.
சிலாங்கூரில் அதிகமான 1,391 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அதனைத் தொடர்ந்து கோலாலம்பூரில் 513 சம்பவங்களும், ஜோகூர் மற்றும் சபாவில் முறையே, 470 மற்றும் 406 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சரவாக்கில் இன்று 213 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, நேற்று தீபகற்பம் முழ்வதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்டது. சரவாக்கில் மட்டும் நிபந்தணைக்குபட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ளது.