கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை சவால் செய்ய எதிர்க்கட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
“நாங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வர விரும்புவது அவசரநிலையை அல்ல, ஆனால், நாடாளுமன்றக் கூட்டத் தொடர வேண்டிய அவசியம், இதனால் நாடாளுமன்றம் தொடர்ந்து அமர முடியும். எனவே, நாளை அல்லது நாளை மறுநாள் நீதிமன்றத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக முகநூலில் நேரடியாக வெளியிடப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.