Home One Line P1 தைப்பூசம் இல்லாததால் கெடாவில் பொது விடுமுறை இல்லை

தைப்பூசம் இல்லாததால் கெடாவில் பொது விடுமுறை இல்லை

668
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: இந்த ஆண்டு கெடாவில் தைப்பூசத்திற்கு பொது விடுமுறை இருக்காது என்று மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் அறிவித்தார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக தைப்பூசத் திருவிழா இரத்து செய்யப்பட்டுள்ளது.

“இந்த ஆண்டு கொண்டாட்டம் இல்லாததால், பொது விடுமுறை இருக்காது, ” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

கோயில்களில் பிரார்த்தனை செய்யத் திட்டமிடுபவர்களுக்கு, கடுமையான கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு ஏற்ப, வழிபாட்டு இல்லங்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

உதாரணமாக, கோவிலில் 100 பேரை அனுமதிக்க முடிந்தால், 33 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று சனுசி கூறினார். எந்த காவடிகளும், பிற நடைமுறைகளும் அனுமதிக்கப்படாது. அடுத்த மாதம் கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டு விழாக்கும் இது பொருந்தும் என்றார்.

இதர மாநிலங்களாக பினாங்கு, சிலாங்கூர், மற்றும் பேராக்கில் பொது விடுமுறைகள் இரத்து செய்யப்படவில்லை.