Home One Line P2 கொவிட்-19: இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய திரிபு 60 நாடுகளுக்கு பரவியது

கொவிட்-19: இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய திரிபு 60 நாடுகளுக்கு பரவியது

541
0
SHARE
Ad

ஜெனீவா: உலக சுகாதார நிறுவனம் புதன்கிழமை இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொவிட் -19 புதிய திரிபு குறைந்தது 60 நாடுகளில் கண்டறியப்பட்டதாகக் கூறியது. ஒரு வாரத்திற்கு முன்பு ஒப்பிடும்போது கூடுதலாக 10 நாடுகளில் இது பரவி உள்ளது.

உலகளாவிய இறப்பு எண்ணிக்கை இப்போது இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக பதிவு செய்துள்ள நிலையில், தொற்று நோயின் புதிய ஆபத்தான மாறுபாடாக இது இருப்பதால், தடுப்பூசிகள் பரவலாகக் கிடைக்கும் வரை உலகம் முழுவதும் தொற்றுநோயைக் குறைக்க போராடுகிறது.

இறப்புகளின் எண்ணிக்கை கடந்த ஏழு நாட்களில் 93,000 சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தில் 4.7 மில்லியன் புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

#TamilSchoolmychoice

டிசம்பர் நடுப்பகுதியில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இங்கிலாந்து திரிபு, அசல் வைரஸை விட 50% முதல் 70% வரை வேகமாகப் பரவும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

இந்த புதிய திரிபு பரவுவது எளிதானது என்றாலும், இது மரணத்தை ஏற்படுத்துவதாக இல்லை என்று கூறப்படுகிறது.