Home One Line P2 ஜோ பைடன் பதவியேற்பு : சில சுவாரசியத் தகவல்கள்

ஜோ பைடன் பதவியேற்பு : சில சுவாரசியத் தகவல்கள்

556
0
SHARE
Ad

வாஷிங்டன் : இன்னும் சில மணி நேரங்களில் அமெரிக்க அதிபராக அதிகாரபூர்வமாகப் பதவியேற்கவிருக்கும் ஜோ பைடனின் பதவியேற்பு விழா குறித்த சில சுவைத் தகவல்கள்:

  • பதவியேற்கும் முன்பு வாஷிங்டனில் உள்ள கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட வழிபாட்டில் ஜோ பைடன்  தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
  • அமெரிக்க வரலாற்றில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது கத்தோலிக்க அதிபர் ஜோ பைடன் ஆவார். இதற்கு முன்னர் முதலாவது கத்தோலிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜோன் எஃப் கென்னடி ஆவார்.
  • 127 ஆண்டுகள் பழமை வாய்ந்த தனது குடும்ப பைபிளின் மீது சத்தியப் பிரமாணம் செய்து ஜோ பைடன் பதவியேற்றுக் கொள்வார். அவருக்கு அமெரிக்கத் தலைமை நீதிபதி சத்தியப் பிரமாணம் செய்து வைப்பார்.
  • ஜோ பைடனை பதவி விலகிச் செல்லும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம் வாழ்த்து தெரிவிக்காமல், மரியாதை சந்திப்பு நிகழ்த்தாமல் சென்று விட்டாலும், டிரம்பின் துணை அதிபராகப் பதவி வகித்த மைக் பென்ஸ் பைடனின் பதவியேற்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது,
  • முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், அவரது துணைவியார் ஹிலாரி கிளிண்டன், ஜோர்ஜ் புஷ், பராக் ஒபாமா ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.
  • பிரபல பாடகிகள் லேடி காகா, ஜெனிபர் லோப்பஸ் ஆகியோர் கலைநிகழ்ச்சிகளைப் படைக்கவிருக்கின்றனர்.