Home One Line P1 உணவகங்கள் இனி இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம்

உணவகங்கள் இனி இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம்

535
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமுலாக்கத்தில் இருக்கும் மாநிலங்கள், பிரதேசங்களில் உணவகங்கள் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கலாம் என இஸ்மாயில் சப்ரி அறிவித்தார்.

இதற்கு முன் இரவு 8.00 மணி முதல்தான் உணவகங்கள் செயல்பட முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 22) முதல் உணவகங்கள் இரவு 10.00 மணி வரை செயல்பட முடியும் என தெரிவித்த தற்காப்பு அமைச்சருமான இஸ்மாயில் சப்ரி எனினும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த முடியாது என்ற கட்டுப்பாடு தொடர்வதாகவும் கூறினார்.

#TamilSchoolmychoice

உணவகங்களுக்கான வணிக நேரத்தை நீட்டிக்க வேண்டுமென உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.