ஹாங்காங் : சீனாவில் அலிபாபா நிறுவனத்தை நடத்தி வந்த ஜேக் மா அதன் மூலம் உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவராக உயர்ந்தார். அவரது அலிபாபா நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.
ஆனால் அண்மையக் காலமாக அவருக்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் ஜேக் மா பொதுவில் எங்கும் காணப்படவில்லை என்றும் தகவல்கள் வெளிவரத் தொடங்கின.
சீன அரசாங்கத்தின் காவலில் ஜேக் மா வைக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளிவரத் தொடங்கின.
இந்நிலையில் சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாத ஜேக் மா முதல் முறையாக காணொளி வழியான கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டதாக சீன அரசாங்கத்தின் சார்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவரின் நிறுவனத்தின் பங்குகள் ஹாங்காங் பங்குச் சந்தையில் உயரத் தொடங்கியுள்ளன.