அதே வேளையில் நாடு இதுவரை காணாத அளவுக்கு 18 மரணங்களும் பதிவாகியிருக்கின்றன.
உள்ளூரில் 3,625 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 6 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 176,180 சம்பவங்கள் இதுவரையில் பதிவாகி உள்ளன.
இன்னும், 42,814 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 251 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 102 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இன்று ஒரே நாளில் 18 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 660-ஆக உயர்ந்துள்ளது.
சபா 453 சம்பவங்களைப் பதிவு செய்த நிலையில் கோலாலம்பூர் 435 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.