Home One Line P1 மக்காவ் ஊழல் விசாரணையில் கல்லூரி ஒன்று சம்பந்தப்பட்டுள்ளது

மக்காவ் ஊழல் விசாரணையில் கல்லூரி ஒன்று சம்பந்தப்பட்டுள்ளது

454
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: இங்குள்ள ஒரு தனியார் கல்லூரியின் இயக்குநர் ஒருவர் சம்பந்தப்பட்ட பண மோசடி விசாரணையைத் தொடர்ந்து, அதன் ஆறு வங்கிக் கணக்குகள் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன.

காவல்துறையினர், உள்நாட்டு வருமான வரி வாரியம் (எல்.எச்.டி.என்) மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) தொழிலதிபரும், கல்லூரியின் இயக்குநருமான ஒருவரை விசாரித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக, கல்லூரியின் 200 ஊழியர்களின் ஊதியங்கள், குறைந்தது மூன்று மாதங்களுக்கு அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

செபெராங் பெராயைச் சேர்ந்த தொழிலதிபர், அவரது வணிக பங்காளிகள் மற்றும் கூட்டாளிகளின் 200 கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

மூன்று வாரங்களுக்கு முன்னர் காவல் துறையினரின் மக்காவ் ஊழல் மோசடி தொடர்பாக விசாரணையின் தொடர்பில் கல்லூரி இயக்குனர் மற்றும் அவரது வணிக கூட்டாளிகள் மீதான சமீபத்திய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எப்எம்டியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 3-ஆம் தேதி, மக்காவ் மோசடி கும்பல் வங்கி கணக்குகளின் மூலம் 336 மில்லியனை மோசடி செய்ததாக ஜோகூர் காவல் துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பான தொடர் சோதனைகளில் கடந்த மாதம் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.