Home One Line P2 இந்தியாவில் அந்தமான், நிகோபார் தீவுகள் கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட்டுள்ளன

இந்தியாவில் அந்தமான், நிகோபார் தீவுகள் கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட்டுள்ளன

635
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் முதல் முறையாக கொவிட்-19 தொற்று இல்லாத மாநிலமாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் பெற்றுள்ளன. இந்தியாவில், கொவிட்-19 தொற்று பாதிப்பு குறைதுள்ள நிலையில், முதல் முறையாக தொற்றில்லாத பகுதிகளாக இந்த தீவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று (பிப்ரவரி 2) வெளியிட்டுள்ள தகவலின்படி, கடைசியாக கொவிட்-19 பாதிப்பிற்கு ஆளான நான்கு பேரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகக் கூறியுள்ளது.

இங்கு மொத்தம் 4,932 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. 62 பேர் பலியாகி இருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

நாட்டின் மொத்த தொற்று நோயாளிகள் தற்போது 161,000- ஆக இருக்கின்றனர். ஆனால், கேரளாவில் கொவிட்-19 பாதிப்பு, மொத்த பாதிப்பிலிருந்து 10.8 விழுக்காடு என்ற உச்ச நிலையில் இருக்கிறது.