Home One Line P1 கொவிட் 19 தடுப்பூசி நடவடிக்கை பிப்ரவரி 26 தொடங்குகிறது

கொவிட் 19 தடுப்பூசி நடவடிக்கை பிப்ரவரி 26 தொடங்குகிறது

531
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : பிபைசர்-பையோன்டெக் நிறுவன கொவிட்-19 தடுப்பூசிகளின் முதல் கட்ட எண்ணிக்கையான 312,390 அளவைகள் (Doses) எதிர்வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி நாட்டிற்குள் வந்தடையும் என பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து தடுப்பூசிகள் போடப்படும் நடவடிக்கை பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கும். அந்தத் தடுப்பூசியை பெறும் முதல் நபராக பிரதமரே இருப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் தானே முன்வந்து முதல் நபராக அந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதாக மொகிதின் அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

முன்களப் பணியாளர்களும், நாடாளுமன்ற,  சட்டமன்ற உறுப்பினர்களும் முதன் முதலாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வர்.

இதற்கான வழிகாட்டிப் புத்தகத்தை மொகிதின் யாசின் இன்று வெளியிட்டார். மேலும் இதற்கான இணையத் தளமான www.VaksinCovid.gov.my  என்ற அகப்பக்கத்தையும் மொகிதின் இன்று தொடக்கி வைத்தார்.

கட்டம் கட்டமாக அனைவரும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள பதிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். அப்படிப் போட்டுக் கொள்வதின் மூலம் நிலைமை மாமூல் நிலைக்குத் திரும்புவதையும் மக்கள் உறுதி செய்ய முடியும்.

அடுத்த ஓராண்டுக்குள் சுமார் 27 மில்லியன் பேர் – மலேசிய மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் இந்தத் தடுப்பூசியைக் கட்டம் கட்டமாகப் பெறுவர்.