Home One Line P2 சீமான் 108 ஆடுகள் வெட்டி கறி விருந்து அளித்தார்! ஏன் தெரியுமா?

சீமான் 108 ஆடுகள் வெட்டி கறி விருந்து அளித்தார்! ஏன் தெரியுமா?

802
0
SHARE
Ad

சிவகங்கை : தமிழ் நாடு அரசியல் களத்தில் கலகலப்பான, பரபரப்பான அரசியல்வாதிகளில் ஒருவர் சீமான். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்.

தேர்தலில் அவர் வாக்குகள் பெறுவது குறைவாக இருந்தாலும், அவரது உரைகளும், கருத்துகளும், அதிரடித் தாக்குதல்களும் எப்போதுமே ஊடகங்களால் பெரிதுபடுத்திக் கொண்டாடப்படும்.

அண்மையில் தனது குலதெய்வ கோவிலான சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே, முடிக்கரை வீரமாகாளியம்மன் கோவிலில் நடந்த விழாவில்,108 ஆடுகள் வெட்டி தனது கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் கறிவிருந்து அளித்திருக்கிறார் சீமான்.

#TamilSchoolmychoice

ஏன் தெரியுமா?

அவரின் மகன் பிரபாகரனின் காதணி மற்றும் முடிகாணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிக்காகத்தான் அந்தக் கறிவிருந்தைப் படைத்திருக்கிறார் சீமான்.