புதுச்சேரி : கடந்த பல மாதங்களாக புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் நீடித்து வந்த போராட்டம், மோதல்களைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 16) மாலையில் கிரண்பேடியை அந்தப் பொறுப்பில் இருந்து குடியரசுத் தலைவர் நீக்கினார்.
அவருக்குப் பதிலாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
கிரண்பேடி நீண்ட காலமாக தனது கடமையிலிருந்து தவறி முறைகேடாகச் செயல்படுகிறார் என புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி புகார் கூறி வந்தார்.
இறுதியாக நாராயணசாமியின் போராட்டத்திற்கு வெற்றி கிட்டும் விதமாக கிரண்பேடி நீக்கப்பட்டுள்ளார்.