ரோஸ்லி டஹ்லான் சரவானா பார்ட்னர்ஷிப் வழக்கறிஞர் நிறுவனம் வெளியிட்ட பிப்ரவரி 16 தேதியிட்ட சட்ட நடவடிக்கைக் கடிதத்தில், பிப்ரவரி 9-ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட பதிவுகள் தொடர்பான இடுகையை சந்தேகத்திற்கு இடமின்றி நீக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
” இடுகையில் உள்ளது எங்கள் வாடிக்கையாளருக்கு எதிராக முற்றிலும் பொய்யான, தேவையற்ற, ஆதாரமற்றதாக உள்ளன என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் வாடிக்கையாளருக்கு எதிரான இந்த கருத்துகள் பொய்யானவை, பொருத்தமற்றவை, ஆதாரமற்றவை, தீங்கிழைக்கும், எனவே அவை திட்டவட்டமாக மறுக்கப்படுகின்றன,” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்பு உடனடியாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கு ஒரு தெளிவான பொது மன்னிப்பு வழங்க ஒப்புக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“எங்கள் வாடிக்கையாளருக்கு 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க கோருமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள் நீங்கள் மேற்கூறிய கோரிக்கைகளுக்கு இணங்கத் தவறினால், உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எங்கள் வாடிக்கையாளரின் அறிவுறுத்தல்கள் எங்களிடம் உள்ளன,” என்று அது கூறியது.
பிப்ரவரி 9-ஆம் தேதி, புவாட் கூறிய கூற்றுகளை பிரதமர் அலுவலகம் மறுத்தது.
வெளிநாடுகளிலிருந்து அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு திரும்பி வரும் அமைச்சர்களுக்கு மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவு செய்யப்பட்டுள்ளதற்குக் காரணம், பிரதமர் இந்தோனிசியாவிலிருந்து திரும்பி வந்தபின் தனிமைப்படுத்தப்பட விரும்பவில்லை என்று புவாட் கூறியிருந்தார்.