Home One Line P1 டிடிக்டிவி கேபிஎம்: சிறப்பு கல்வி அலைவரிசையை பிரதமர் தொடக்கி வைத்தார்

டிடிக்டிவி கேபிஎம்: சிறப்பு கல்வி அலைவரிசையை பிரதமர் தொடக்கி வைத்தார்

368
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று சிறப்பு கல்வி தொலைக்காட்சி அலைவரிசையான ‘டிடிக்டிவி கேபிஎம்’-ஐ தொடக்கி வைத்தார்.

இன்று தொடங்கும் டிடிக்டிவி கேபிஎம், தினமும் காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை மைடிவில் 107, ஆஸ்ட்ரோவில் 147 மற்றும் டிவி யுனிபை என்டிவி 7 மூலம் பார்க்கலாம்.

சிறப்பு அலைவரிசையை அமைப்பது, நாடு முழுவதும் மாணவர்களுக்கு தரமான கல்விக்கான அணுகலை அதிகரிப்பதற்கான அமைச்சின் முயற்சியாகும்.

#TamilSchoolmychoice

டிடிக்டிவி கேபிஎம் அமைச்சின் பாடத்திட்டம் மற்றும் இணை பாடத்திட்டத்தின் அடிப்படையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவுள்ளது. அத்துடன் ஆரம்பப்பள்ளி முதல் படிவம் 6 வரையிலான கல்வி உலகம் பற்றிய செய்திகள், கல்வித் திட்டங்கள் மற்றும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் இதில் அடங்கியிருக்கும் என்று பிரதமர் கூறினார்.

மேலும், நல்ல மதிப்புகள் மற்றும் மாணவர்களின் தன்மை வளர்ச்சியை மையமாகக் கொண்ட வாழ்நாள் கற்றல் உள்ளடக்கமும் ஒளிபரப்பப்படும் என்றார் அவர்.

“குறிப்பாக இயங்கலை கல்விக்கான அணுகல் இல்லாத மாணவர்களுக்கு பிடிபிஆர் (வீட்டு அடிப்படையிலான கற்பித்தல் மற்றும் கற்றல்) செயல்படுத்த டிடிக்டிவி கேபிஎம் உதவ முடியும் என்று நான் நம்புகிறேன் , “என்று அவர் கூறினார்.