Home One Line P1 வெளிநாட்டு அரசியல்வாதிகளிடம் நாட்டை விற்க வேண்டாம்!

வெளிநாட்டு அரசியல்வாதிகளிடம் நாட்டை விற்க வேண்டாம்!

475
0
SHARE
Ad
படம்: பெர்சாத்து உச்சமன்றக் குழு உறுப்பினர் முகமட் ரபீக் முகமட் அப்துல்லா

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அனுமதிக்க அனுமதிக்குமாறு மாமன்னர் மற்றும் பிரதமரை நேற்று வலியுறுத்திய 90 ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் சாடியுள்ளார்.

மலேசியாவின் வழியைத் தீர்மானிப்பதில் வெளிநாட்டு அரசியல்வாதிகளின் தலையீடு தேவையில்லை என்று முகமட் ரபீக் முகமட் அப்துல்லா கூறினார்.

சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வெளிநாட்டு தலையீட்டை கொண்டு வர நினைப்பதாகவும், இது ஓர் அவநம்பிக்கையான நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நம் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், நாட்டை வெளிநாட்டு அரசியல்வாதிகளுக்கு விற்கும் நிலையை அடைய வேண்டாம். இது சிறிய விஷயமல்ல. நமது உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் அரசியல்வாதிகளை ஈடுபடுத்துவது நாட்டின் இறையாண்மையைத் தூண்டுவதற்கு ஒத்ததாகும், ” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

90 அரசியல்வாதிகளின் கூட்டு அறிக்கை, மனித உரிமைகளுக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற குழுவில் இருந்து வந்தது என்று ரபீக் குறிப்பிட்டார்.

அதன் நிறுவனர்களில் ஜசெகவின் லிம் கிட் சியாங் மற்றும் சார்லஸ் சந்தியாகு இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

90 அரசியல்வாதிகள், அரசாங்கம் நம்பகத்தன்மையுடன் இருப்பதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முக்கிய கொள்கை முடிவுகளுக்கு பங்களிக்கும் அதே வேளையில் அவசரகால நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்ற அமர்வை அனுமதிக்க வேண்டும் என்று ஓர் அறிக்கையில் கூறினர்.