கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குற்றவாளிகளுக்கு 10,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
கடுமையான தண்டனைகள் குறித்த யோசனையை ஆதரிப்பதாக நஜிப் கூறினார், ஆனால், கொவிட் -19 நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் அனைத்து மீறல்களுக்கும் இவ்வளவு கடுமையான அபராதம் விதிக்கப்படுவது தேவையில்லை என்று அவர் ஒரு முகநூல் பதிவில் சுட்டிக்காட்டினார்.
“கவனக்குறைவான தவறுகள்” காரணமாக குற்றங்களைச் செய்தவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும், மக்களை திவாலாக்குவதாக இருக்கக் கூடாது என்று அவர் கூறினார்.
முதல் முறையாக குற்றவாளிகளுக்கு 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கலாம் என்று நஜிப் பரிந்துரைத்தார். அவர்கள் தவறை மீண்டும் செய்யதால் இதை அதிகரிக்க முடியும் என்று கூறினார்.
பாரபட்சமான நடைமுறை தொடர்ந்தால் பொதுமக்களின் கோபம் அதிகரிக்கக்கூடும் என்றும் நஜிப் எச்சரித்தார்.