Home One Line P2 சீனா முழுமையாக வறுமையிலிருந்து விடுபட்டதாக அறிவித்துள்ளது

சீனா முழுமையாக வறுமையிலிருந்து விடுபட்டதாக அறிவித்துள்ளது

587
0
SHARE
Ad

பெய்ஜிங்: சீனாவில் கிராமப்புற வறுமையை ஒழிக்கும் முயற்சியில் முழுமையான வெற்றி பெற்று விட்டதாக சீன அதிபர் ஜி ஜின்பெங் நேற்று வியாழக்கிழமை (பிப்ரவரி 25) பெய்ஜிங்கில் நடந்த ஒரு விழாவில் தெரிவித்தார்.

ஏறக்குறைய 100 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து உயர்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.சி.பி) இந்த ஆண்டின் 100- வது ஆண்டு விழாவிற்கு இது பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.

“சி.சி.பி- இன் தலைமையும், சீனாவின் சோசலிச அமைப்பும் ஆபத்துகள், சவால்கள் மற்றும் சிரமங்களுக்கு எதிரான அடிப்படை உத்தரவாதங்கள்,” என்று ஷி கூறினார்.

#TamilSchoolmychoice

சில உலகளாவிய கொள்கை வல்லுநர்கள், சீனா தனது வறுமை பகுதிகளை வரையறுப்பதில் குறைந்த தடைகளை நிர்ணயித்ததாகக் கூறியுள்ளனர். அதன் ஏழ்மையான பகுதிகளில் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு நிதியளிக்க நிலையான முதலீடு தேவைப்படுகிறது அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த எட்டு ஆண்டுகளில் வறுமைக்கு எதிராக சீனா 1.6 டிரில்லியன் யுவான் முதலீடு செய்துள்ளது என்று ஜி கூறினார்.