Home One Line P1 சீனப் புத்தாண்டு காரணமாக 2 தொற்று குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

சீனப் புத்தாண்டு காரணமாக 2 தொற்று குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

430
0
SHARE
Ad
படம்: டி ஸ்டார்

கோலாலம்பூர்: சமீபத்திய சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சரவாக்கில் புதிய கொவிட் -19 தொற்று குழு அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஜாலான் ஹோ பின் தொற்று குழுவில் 14 பேர் இதுவரையிலும் பாதித்துள்ளதாக சரவாக் மாநில பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 11 முதல் 14 வரை சமாராஹான், சீரியன் மற்றும் கூச்சிங்கில் சீனப் புத்தாண்டு வருகையின் காரணமாக இந்த தொற்று குழு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

நேற்று, சரவாகில் 219 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது மாநிலத்தில் மொத்த சம்பவங்களின் எண்ணிக்கையை 8,869 ஆகக் கொண்டு வந்துள்ளது. சிபுவில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களிலிருந்து சபா அதன் முதல் தொற்று குழுவை பதிவுசெய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஹோ பின் ரோட் தொற்று குழு அடையாளம் காணப்பட்டது.