கோலாலம்பூர்- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உத்தரவுகளின் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள், கொவிட் -19 பரவுவதைத் தடுக்க அவசரநிலை சட்டத் திருத்தத்தின் கீழ் மார்ச் 11 முதல் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வர்.
இந்தச் சட்டத்தின் கீழ் இக்குற்றங்களுக்கான அபராதம் தனிநபர்களுக்கு 1,000 ரிங்கிட்டிலிருந்து 10,000 ரிங்கிட்டாகவும், நிறுவனங்களுக்கு 50,000 ரிங்கிட்டாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, குற்றத்தைச் செய்யும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 1,000 ரிங்கிட் அபராதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டால், ஒரு குற்றத்திற்கு 100,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
முகக்கசவங்கள் அணியாதது, கூடல் இடைவெளிக்கு இணங்கத் தவறியது, வாடிக்கையாளர் விவரங்களை பதிவு செய்யத் தவறியது, அனுமதியின்றி மாவட்டங்கள் / மாநிலங்களைக் கடப்பது மற்றும் பொழுதுபோக்கு மைய நடவடிக்கைகளை திறப்பது போன்ற குற்றங்கள் இந்த அபராதத்தில் அடங்குகிறது.