நேற்று மாலை 6.42 மணியளவில் 35 வயதான ஆடவரும், சிறுவனும் புரோட்டோன் விரா காரில் இறந்துவிட்டதாக தங்களுக்கு அழைப்பு வந்ததாக, சிரம்பான் காவல் துறை தலைவர் முகமட் சைட் இப்ராகிம் தெரிவித்தார்.
“காவல் படை துப்பாக்கியைப் பயன்படுத்தி அந்த நபர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. அதற்கு முன்னர் அவர் தனது சொந்த மகனை சுட்டுக் கொன்றதாக நாங்கள் நம்புகிறோம். இரு உடல்களிலும் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது, ஆனால் அது குடும்ப பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.