Home One Line P1 வாக்களிக்கும் வயதை 18-ஆகக் குறைக்க தேசிய கூட்டணி பயப்படவில்லை!

வாக்களிக்கும் வயதை 18-ஆகக் குறைக்க தேசிய கூட்டணி பயப்படவில்லை!

535
0
SHARE
Ad

பாகோ: தேசிய கூட்டணி அரசாங்கம் வாக்களிக்கும் வயதை 18 ஆகக் குறைப்பதற்கு பயப்படவில்லை என்று பிரதமர் மொகிதின் யாசின் கூறினார்.

தேர்தல் ஆணையத் தலைவரை சந்தித்ததாக மொகிதின் கூறினார். ‘உண்டி18’ ஐ விரைவில் செயல்படுத்த முடியாது என்று தனக்கு அறிவித்ததாகக் கூறினார். இது தொடர்பாக தேசிய கூட்டணியை குற்றம் சாட்டக்கூடாது என்றும் அவர் கூறினார்.

“சிலர் தேசிய கூட்டணி பயப்படுகிறது என்று கூறுகிறார்கள். நாங்கள் பயப்படவில்லை. உண்மையில், இளைஞர்களில் பெரும் பகுதியினர் அரசாங்கத்தை ஆதரிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால், நாங்கள் என்ன செய்ய முடியும்? ”அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மில்லியன் கணக்கான வாக்காளர்களை உள்ளடக்கியுள்ளதால், தேசிய பதிவுத் துறை போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவைப்படும். இது பாரிய திட்டமாக இருப்பதால், இந்த விவகாரம் அரசியல் மயமாக்கப்படக்கூடாது என்று பிரதமர் கூறினார்.